• August 21, 2025
  • NewsEditor
  • 0

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்காக லட்சக்கணக்கில் தொண்டர்கள் மாநாட்டுத் திடலை நோக்கி வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

மாநாட்டில் வசதியான இடத்தில் அமருவதற்காக அதிகாலை முதலே தொண்டர்கள் வந்துள்ளனர். தொடக்கத்தில் முன் வரிசையில் இடம் பிடித்தவர்கள் வெயில் அதிகரிக்க அதிகரிக்க சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வெயிலை சமாளிக்க தரையில் விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தை கிழித்து அருகில் உள்ள கம்பி, கம்பு போன்ற நிலைகளில் கட்டி கூரையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

மேலும் முன்னதாகவே ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டுவிட்டதால் தண்ணீர் விநியோகப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்துள்ளதாக செய்திகள் வந்திருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக மருத்துவ குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதனால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

மாநாடு மாலை 4 மணியளவில் தொடங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. தொண்டர்கள் வருகை காரணமாக சற்று முன்னதாகவே மாநாடு தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *