• August 21, 2025
  • NewsEditor
  • 0

60 வயசுக்கு அப்புறம் பென்ஷன் இல்லாம எப்படி வாழுறது? இந்தக் கேள்வி உங்க நிம்மதியைப் பறிக்குதா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நீங்க 30 வருஷத்துக்கு மேல வேலை செஞ்சு, அப்புறம் 25 வருஷத்துக்கு மேல ஓய்வுக்காலத்துல கழிக்க போறீங்க. உங்க PF-ல இருக்குற பணம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்?

நம்ம அப்பா காலத்துல பென்ஷன் இருந்துச்சு, நமக்கு?

அரசு ஊழியர்களுக்குக் கூட இப்போ பழைய பென்ஷன் திட்டம் இல்லை. தனியார்-னா பென்ஷனே கிடையாது. அப்போ நாமளே தான் நமக்கு ஒரு பென்ஷன் திட்டத்தை உருவாக்கிக்கணும்! அதுதான் எஸ்.டபிள்யு.பி எனப்படும் சிஸ்டமேட்டிக் வித்டிராவல் பிளான் (SWP – Systematic Withdrawal Plan).

SWP

SWP-னா என்னன்னு ரெண்டு நிமிஷத்தில தெரிஞ்சுக்கணுமா?

நீங்க ₹1 கோடி மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்றீங்கன்னு வச்சுக்கலாம். அந்த ஃபண்ட் 12% ரிட்டன்ஸ் கொடுக்குதுன்னு வெச்சுப்போம். நீங்க அதுலேர்ந்து மாதம் ₹50,000 எடுக்குறீங்க (ஆண்டுக்கு 6%). எனவே, மீதி 6% பணம் வளர்ந்துட்டே இருக்கும். அதேசமயம் மாதாமாதம் உங்களுக்கு சம்பளம் மாதிரி ஓய்வூதியம் கிடைச்சிட்டே இருக்கும்! 

வங்கி எஃப்.டி vs எஸ்.டபிள்யு.பி – எது சிறந்தது?

எஃப்.டி: ₹1 கோடிக்கு 7% வட்டி → மாதம் ₹58,000. உட்சபட்ச 30% வரியைக் கழிச்சா ₹40,600 தான் கைக்கு வரும். இது விலைவாசி உயர்வுக்கு எதிராக பெரிய வருவாயையும் ஈட்டித் தராது.

எஸ்.டபிள்யு.பி: ₹1 கோடி SWP-ல → மாதம் ₹50,000 எடுத்துக்கலாம். FD-யை விட வரியும் குறைவு (ஒரு வருஷத்துக்கு மேல முதலீடு பண்ணி கிடைக்கும் லாபத்துக்கு 12.5% வரி). அதோடு உங்க பணம் வளர்ந்துட்டே இருக்கும்!

மன அமைதிதான் முக்கியம்

ரிடையர்மென்ட்ல மிக முக்கியம் மன அமைதி. “நாளைக்கு பணம் தீர்ந்துபோயிடுமோ, பிள்ளைகள்கிட்ட கையேந்தும் நிலைமை வருமோ”-ன்னு பயப்படாம வாழணும். அதுக்கு நீங்க உங்களுக்கு ஏற்றமாதிரி ஒரு SWP பிளானைத் தயார் பண்ணனும்.

மகிழ்ச்சியான ஓய்வுக் காலம்
மகிழ்ச்சியான ஓய்வுக் காலம்

PF, NPS போன்ற நிறைய பென்ஷன் திட்டங்கள் இருந்தாலும் இதுல உங்களால உங்க பணத்தை முழுமையா எடுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட தொகைதான் உங்களால எடுத்துக்க முடியும். ஆனா SWP திட்டத்துல உங்களுக்கு அவசரத் தேவை வர்றப்போ உங்க பணத்தை எந்தவித கெடுபிடி இல்லாம எடுக்க முடியும்!

நீங்க இப்போ மாதம் ₹50,000 செலவு பண்றீங்கன்னா, 20 வருஷம் கழிச்சு அதே வாழ்க்கைத் தரத்தைக் கடைப்பிடிக்க குறைந்தது, மாதம் ₹1.5 லட்சம் வேணும். நம்ப முடியலையா? இதுதான் விலைவாசி உயர்வின் ஆற்றல்! அதனாலதான் இன்னைக்கே உங்க SWP பென்ஷன் பற்றி யோசிக்க சொல்லுறோம்!

15 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முதலீடு செய்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனம் ‘லாபம்’. இவங்க வர்ற ஆகஸ்ட் 24-ஆம் தேதி SWP மூலம் பென்ஷன் பெறுவது எப்படி?ங்கிற வெபினார் (ஆன்லைன்) நிகழ்ச்சியை நடத்த இருக்காங்க.

நீங்க SWP-ல முதலீடு பண்ணனுமா? உங்களுக்கான நிகழ்ச்சி இதோ:

webinar

தலைப்பு: SWP மூலம் பென்ஷன் பெறுவது எப்படி?
நாள்: ஆகஸ்ட் 24, 2025, ஞாயிறு
நேரம்: இந்திய நேரம் காலை 11:00 – மதியம் 12:30 மணி வரை
பேச்சாளர்: பாபு கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஷெர்பா, ஃபின்ஷெர்பா ஃபினான்ஷியல் சர்வீசஸ்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் SWP மூலம் எவ்வளவு பென்ஷன் பெறலாம் என்று அறிய உதவும் கால்குலேட்டர் ஷீட் இலவசமாக வழங்கப்படும்.

ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/8yFXfT8HonSfYTWH7

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *