
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை மருத்துவரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்திலும், பெயர் மற்றும் பாலினத்தை ஒரு மாதத்துக்குள் மாற்றி வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்தவர் பியான்சி லாய்ஷ்ராம். இவர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த முதல் திருநங்கை மருத்துவர். போபாய் லாய்ஷ்ராம் என்ற பெயரில் ஆணாக இருந்தவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை மூலம் திருநங்கையாகி மாறி அந்த சான்றிதழ் மூலம் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டுகளை பெற்றார்.