
‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார்.
ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் இதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.