
புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21-ம் தேதி அந்த பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.