
சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் – 2026ல் நடிகர் சூர்யா போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில் அதை பொய் செய்தி என திட்டவட்டமாக மறுத்துள்ளது அவரது தலைமை நற்பணி இயக்கம்.
இது தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைதள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கaம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.