
சென்னை: கோயம்பேடு – பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, நிலம் கையகப்படுத்தல் உட்பட பல்வேறு பணிகளைத் தொடங்க ரூ.2,442 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதையடுத்து, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கிடையில், மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், கோயம்பேடு – ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.