• August 20, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பை பாந்த்ராவில் உள்ள மன்னத் பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது அந்த பங்களாவில் கூடுதல் மாடிகள் கட்டி புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள கட்டடத்தில் 4 மாடிகளை வாடகைக்கு எடுத்து அதில் ஷாருக் கான் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். ஷாருக் கானின் மன்னத் பங்களா எப்போதும் மும்பையில் ஒரு சுற்றுலா மையமாகவே இருந்து வருகிறது. ஷாருக் கானை பார்க்கவும், அவரது வீட்டிற்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஏராளமானோர் அங்கு வருவது வழக்கம். ஆனால் ஷாருக் கானை யாராலும் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது. சோசியல் மீடியாவில் பிரபலமான சுபம் பிரஜாபத் என்பவர் ஷாருக் கானை எப்படியாவது பார்க்க ஆசைப்பட்டார்.

சுபம்

இதற்காக ஷாருக் கான் பங்களாவிற்கு சென்றார். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் உள்ளே விடவில்லை. ஆனாலும் மனம் தளராமல் சுபம் வேறு வழியில் ஷாருக் கானை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை ஆலோசித்தார். சுபம் நடிகர் ஷாருக் கான் பெயரில் இரண்டு கோல்டு காபி ஆர்டர் செய்தார். அதில் ஒன்று ஷாருக் கானுக்கும் மற்றொன்று தனக்கும் என ஆர்டர் செய்திருந்தார். அந்த காபி வந்தவுடன் அதனை எடுத்து வந்த டெலிவரி பாயிடம் பேக்கோடு அவற்றை தன்னிடம் கொடுக்கும்படி கெஞ்சி கேட்டு வாங்கிக்கொண்டு ஷாருக் கான் பங்களாவிற்கு சுபம் சென்றார்.

டெலிவரி பாய் கொடுத்த பேக்கை எடுத்துக்கொண்டு மன்னத் பங்களாவின் முன்கேட்டிற்கு சுபம் சென்றார். கோல்டு காபி ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதாக சுபம் தெரிவித்தார். உடனே மெயின் கேட்டில் இருந்த பாதுகாவலர்கள் சுபத்தை உள்ளே விடவில்லை. பின்புறம் இருக்கும் ரகசிய வழி வழியாக செல்லும்படி கேட்டுக்கொண்டனர். உடனே சுபம் பின் வாசல் வழியாக உள்ளே சென்றார். அங்கு நின்ற பாதுகாவலரிடமும் கோல்டு காபி ஆர்டர் செய்திருப்பதாக சுபம் தெரிவித்தார். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் யார் காபி ஆர்டர் செய்தது என்றும், ஆர்டர் செய்த நபருக்கு போன் செய்து தங்களிடம் கொடுக்கும்படியும் கேட்டனர்.

ஆனால் அதற்கு சுபத்தால் சரியாக பதில் கொடுக்க முடியவில்லை. உடனே அங்கு நின்ற பாதுகாவலர், ஷாருக் கான் ஒரு போன் செய்தால் அனைத்து காபி தயாரிப்பாளர்களும் அவர் முன்பு வந்து நிற்பார்கள் என்று கூறி சுபத்தை அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்த நிகழ்வுகளை சுபம் வீடியோவாக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *