• August 20, 2025
  • NewsEditor
  • 0

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்

டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார்.

அந்நேரம் அங்கு வந்த ஒருவர் முதல்வர் ரேகாவிடம் சில ஆவணங்களை கொடுத்தார். அந்நேரம் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த நபர் முதல்வர் ரேகா குப்தாவை கையை பிடித்து இழுத்து அடித்துள்ளார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்வத்தில் சதி இருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது. முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபரை டெல்லி போலீஸார் உடனே கைது செய்துள்ளனர்.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா

சம்பவத்திற்கு காரணம் என்ன?

அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் ராஜேஷ் சக்ரியா(40) என்று தெரிய வந்தது.

அவரது சொந்த ஊர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் என்றும், அவரது உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

அவரை விடுவிக்க உதவும்படி கேட்டுத்தான் முதல்வர் ரேகாவிடம் ராஜேஷ் சென்றுள்ளார். அது தொடர்பான ஆவணங்களை கொடுத்தபோதுதான் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ் கோபத்தில் கையை பிடித்து இழுத்து முறுக்கி அடித்துள்ளார்.

ராஜேஷ் சம்பவ இடத்தில் மது அருந்தி இருந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

சம்பவத்தின் போது பாதுகாப்பான அழைத்துச் செல்லப்பட்ட ரேகா

என்ன காரணத்திற்காக ராஜேஷ் அவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருவதாக டெல்லி போலீஸ் கமிஷனர் கே.சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத் போலீஸார் ராஜ்கோட்டில் ராஜேஷ் தாயாரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ராஜேஷ் தாயார் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “தனது மகன் விலங்குகள் நல ஆர்வலர். தெரு நாய் தொடர்பான வழக்கு தொடர்பாக டெல்லி செல்வதாக கூறிவிட்டு சென்றான். அவன் டெல்லி முதல்வரை சென்று பார்ப்பான் என்று எங்களுக்கு தெரியாது. அவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *