
மதுரை: மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை. தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு இருக்குமா என்பதையும் பொறுத்திருந்தே பாருங்கள் என்றார்.