
அமெரிக்கா பிற நாடுகளின் மீது ‘பரஸ்பர வரி’ விதித்து வருவது நாம் அனைவரும் அறிந்தது தான்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தியா மீது 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது.
பின்னர், ரஷ்யா உடன் வணிகம் செய்கிறோம் என்று 25 சதவிகித வரி 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது.
அமெரிக்காவின் முக்கிய குற்றச்சாட்டுகள் என்ன?
“இந்தியா ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்குகிறது. அதை சுத்தப்படுத்தி பிற நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்கிறது. மேலும், இந்தியா தனது உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை.
அடுத்ததாக, எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா, ரஷ்யாவிற்கு கொடுக்கும் பணத்தை வைத்து தான் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்துகிறது.”
இது தான் இந்தியா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள்.
ரஷ்யா உடன் வணிகம் செய்வதால், இந்தியாவிற்கு மட்டுமல்ல, பிரேசில் மீதும் 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
சீனா மட்டும் விதிவிலக்கு
ரஷ்யா உடன் இந்தியா, பிரேசில் மட்டுமல்ல சீனாவும் வணிகம் செய்து வருகிறது. சொல்லப்போனால், ரஷ்யா உடன் சீனா தான் அதிகம் வணிகம் செய்து வருகிறது.
ஆனால், இதற்காக சீனா மீது எந்தவொரு கூடுதல் வரியும் விதிக்கப்படவில்லை.
காரணம், அமெரிக்கா, சீனா இடையே வணிக பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
“சீனாவிடம் இருந்து தான், ஐரோப்ப நாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால், சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அது உலக அளவில் எண்ணெய் விலையை உயர்த்தும்” – இது சீனா மீது வரி விதிக்காதது குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்க் ரூபியோ சமீபத்தில் சொன்ன பதில்.

எண்ணெய் திட்டத்தில் ரஷ்யாவுடன் இணையும் அமெரிக்கா
இப்படி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஏகப்பட்ட சிக்கல் நிலவி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவே ரஷ்யாவின் எண்ணெய் திட்டத்தில் இணைய உள்ளது.
அது குறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் விளக்குகிறார்.
“எக்ஸான் என்று அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ஒன்று இருக்கிறது.
சகலின்-1 (Sakhalin-1) என்கிற ரஷ்யாவின் எண்ணெய் திட்டத்தில் இந்த நிறுவனம் 30 சதவிகித கூட்டாளியாக இருந்தது.
2022-ம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியப்போது, ரஷ்யாவின் எண்ணெய் திட்டத்தில் இருந்து எக்ஸான் நிறுவனம் விலகிவிட்டது.
தற்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க செல்வதற்கு முன், சகலின்-1 திட்டத்தில் எக்ஸான் நிறுவனம் மீண்டும் இணைவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தியா மீதான வரி குறியுமா?
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறோம் என்று கூடுதலாக 25 சதவிகித வரி விதித்து இருக்கிறார், ட்ரம்ப். ஆனால், அவர் அமெரிக்க எண்ணெய் நிறுவனம் மீண்டும் ரஷ்யாவின் திட்டத்தில் இணைய கையெழுத்திட்டுள்ளார்.
இன்னொரு பக்கம், நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்க் ரூபியோ ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து எச்சரித்துள்ளார்.
ஆனால், ட்ரம்பின் இந்த நடவடிக்கையை வைத்து பார்க்கும்போது, நமக்கான வரி குறையலாம்” என்கிறார் ரெஜி தாமஸ்,
பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ‘Vikatan Play‘-ல் ‘Opening Bell Show’ தினமும் காலை கேளுங்கள்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…