• August 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாளர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்து வாழ்த்து பெற்​றார். குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் (74), உடல்​நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21-ம் தேதி தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, வரும் செப்​டம்​பர் 9-ம் தேதி குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில், தமிழகத்​தைச் சேர்ந்​தவரும் மகா​ராஷ்டிர ஆளுநரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தேர்வு செய்தது. இதையடுத்து, சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நேற்று பிரதமர் மோடியை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். இது தொடர்​பான புகைப்​படத்தை பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலை​தளத்​தில் பகிர்ந்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *