• August 19, 2025
  • NewsEditor
  • 0

பீகார் முன்னாள் முதல்வர், பல ஊழல் வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று இப்போது ஜாமீனில் இருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் ஆன்மிக யாகம் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த யாகத்தில் லாலு பிரசாத் யாதவ் முறைப்படி அமராமல் ஷோபா மீது அமர்ந்தபடி யாகத்தில் கலந்து கொண்டார். அதோடு ஷோபாவில் இருந்தபோது காலில் ஷூ அணிந்தபடி இருந்தார். ஷோபாவில் அமர்ந்தபடி யாக குண்டத்தில் ஹோமத்திற்கான பொருட்களை லாலு பிரசாத் யாதவ் போட்டார். அவரின் இச்செயல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

லாலு பிரசாத் யாதவ் ஷூ அணிந்து கொண்டு யாகத்தில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. இதனால் லாலு பிரசாத் யாதவ் இந்து மத சடங்குகளை அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள் இணையத்தில் லாலு பிரசாத் யாதவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சின்ஹா என்பவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஷூ அணிந்தபடி ஹோம குண்டத்தில் பொருட்களை வீசுவது கேவலமான செயல். எங்கள் சடங்குகளை உங்களால் மதிக்க முடியாவிட்டால், அவற்றை விட்டு விலகி இருங்கள். பொதுமக்களை முட்டாளாக்குவதற்காகவும், போட்டோ எடுப்பதற்காகவும் இதைச் செய்வதை நிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில்.”இந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் அகிலேஷ்-லாலுவின் அரசியல் இதுதான்.

யாகத்தின் போது லாலு யாதவ் காலணி அணிந்து அமர்ந்திருக்கிறார். இது அலட்சியம் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகள் மீதான தாக்குதல். அகிலேஷ் யாதவைப் பாருங்கள், கோவில், மதம் என்ற பேச்சு வந்தவுடன் முகம் சுழிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *