
புதுடெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வாங் யி பேசினார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வாங் யி சந்திக்கிறார். மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சீன அமைச்சர் வாங் யி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்வார் என எதிர்பாார்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.