
‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் நடிகை ரச்சிதா ராம் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. இப்படத்தின் கதாபாத்திர வடிவமைப்புக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதில் சவுபின் சாஹிர் மற்றும் ரச்சிதா ராம் ஆகியோரின் கதாபாத்திரத்துக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக ரச்சிதா ராம் கதாபாத்திரம் மற்றும் நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
தனது கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ரச்சிதா ராம், “‘கூலி’ படத்தில் எனது கல்யாணி கதாபாத்திரத்திற்கு வரவேற்பு அதிகமாக கிடைத்திருக்கிறது. என் கதாபாத்திரத்திற்கு கிடைத்த விமர்சனங்களும், அன்பும் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஊடகம், விமர்சகர்கள், மீம்கள், ட்ரோல் செய்தவர்கள் என அனைவருக்கும் என் நன்றிகள்.