
‘பரதா’ படத்துக்காக விமர்சகர்களுக்கு பணம் கொடுக்க பட்ஜெட் இல்லை என்று அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘பரதா’ (PARADHA). ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை இணையத்தில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
இதனிடையே ‘பரதா’ விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் அனுபமா பரமேஸ்வரன், “‘பரதா’ விமர்சனங்கள் தாமாகவே உருவாகச் செய்ய வேண்டியது தவிர, விமர்சகர்களுக்கு பணம் கொடுக்கவோம், விமர்சனங்களைத் திசைதிருப்பவோ எங்களிடம் பட்ஜெட் இல்லை.