
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த ‘கூலி’ திரைப்படம் கடந்த 14-ம் தேதி வெளியாகியிருந்தது.
லோகேஷ் கனகராஜ் எப்போதுமே தன்னுடைய திரைப்படங்களில் பெரிதளவில் தமிழ் ஆடியன்ஸுக்கு பரிச்சயமில்லாத நடிகர்களை வைத்து சர்ப்ரைஸ் காட்சிகளை கொடுத்துவிடுவார்.
அதற்கு எடுத்துக்காட்டாக, ‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தைச் சொல்லலாம்.
அதுபோல, ‘கூலி’ திரைப்படத்தில் கன்னட நடிகை ரச்சிதாவின் கல்யாணி கதாபாத்திரத்தை வைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
நடிகை ரச்சிதாவைப் பாராட்டி பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டும் வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தனக்கு இப்படியான வரவேற்பு கிடைத்தது குறித்து நடிகை ரச்சிதா ராம், “‘கூலி’ திரைப்படத்தின் என்னுடைய கல்யாணி கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
விமர்சனங்களும், என் கதாபாத்திரத்திற்கு கிடைத்த அன்பும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது! ஊடகங்கள், விமர்சகர்கள், மற்றும் ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ் போடுபவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை நம்பி எனக்கு இப்படியான வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
லெஜெண்ட்ஸுடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். படத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…