• August 18, 2025
  • NewsEditor
  • 0

பை பை தமிழ்நாடு!

‘எதிர்நீச்சல் 2’ தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகை கனிகா தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

சீரியலில் தற்போது மருத்துவமனையில் இருப்பது போல் காட்டி வரும் நிலையில், ‘அவரிடம் தொடர்ந்து சீரியலில் நடிப்பது குறித்தும் பேசினார்களாம். ஆனால் அவரோ தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாகச் சொல்லி விட்டாராம்.

கனிகாவின் வெளியேற்றத்துக்கு டிவி ஏரியாவில் பலரும் பல‌ விதமான காரணங்களைக் கூறி வந்த நிலையில், அவரின் வெளியேற்றத்துக்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.

கனிகா

இது குறித்து கனிகாவுக்கு நெருங்கிய சிலரிடம் பேசினோம்.

”சீரியல்ல நடிச்சா முக்கியத்துவம் இருக்கிற கேரக்டர்னா மட்டுமே நடிப்பேன்னு சொல்லித்தான் ‘எதிர்நீச்சல்’ சீரியல்ல கமிட் ஆனாங்க. அவங்க எதிர்பார்த்த அளவு அந்த சீரியலுக்குமே நல்ல ரேட்டிங் கிடைச்சது.

அதனாலேயே ரெண்டாவது சீசன்லயும் நடிக்க சம்மதிச்சாங்க.

‘இவங்க கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால்தான் சீரியல்ல இருந்து வேளியேறிட்டாங்க’னு சில செய்திகள் வெளியில அடிபடுது. அதுல எல்லாம் உண்மையில்லை.

அவங்க அமெரிக்காவுல போய் செட்டில் ஆகலாம்னு முடிவு செய்திருக்காங்க. அதனாலதான் இந்த முடிவு. மத்தபடி வெளியில் அடிபடுகிற எந்தச் செய்தியிலும் நிஜமில்லை” என்கிறார்கள் அவர்கள்.

அவருக்குப் பதில் இவர்!

‘கயல்’ சீரியலில் கயலின் சகோதரனாக நடித்து வந்தவர நடிகர் அய்யப்பன். இவரது மனைவி பிந்தியா ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிரச்னை செய்தது நினைவிருக்கலாம். இருவருக்குமான குடும்ப பிரச்னை போலீஸ் வரை சென்றதைத் தொடர்ந்து தொடரில் அய்யப்பனையும் பார்க்க முடியவில்லை.

மனைவியை விவாகரத்து செய்கிற முடிவில் அவர் இருப்பதால், அது தொடர்பான வேலையில் இருக்கிறார் என்றார்கள்.

ayyappan

இது தொடர்பாக சீரியலுடன் தொடர்பிலிருக்கும் சிலரிடம் நாம் ஏற்கனவே பேசியிருந்தோம். அப்போது அவர்கள், ‘சன் டிவியைப் பொறுத்தவரை சீரியல்ல நடிச்சிட்டிருந்த ஒரு நடிகர் அல்லது நடிகை தனிப்பட்ட காரணங்களுக்காக சர்ச்சைகளில் அடிபட்டாலோ அல்லது பிரச்னைகளில் சிக்கினாலோ சிக்கலைத் தீர்த்து விட்டுட்டு வாங்க’னு சொல்லிடுவாங்க.

அய்யப்பன் விவகாரத்துலயும் அதுதான் நடந்தது. ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கே வந்து அவர் மனைவி பிரச்னையில் ஈடுபட்டதை சேனலும் தயாரிப்பாளர்களும் ரசிக்கலை. நல்லா போயிட்டிருக்கிற சீரியலில் ரேட்டிங்கும் பாதிக்கப்படலாம்னு நினைச்சுதான் பிரச்னையை முடிச்சுட்டு வரச் சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க’ என்றார்கள் அவர்கள்.

இந்த நிலையில் இப்போது அய்யப்பனுக்குப் பதில் அந்தக் கேரக்டரில் நடிக்க நடிகர் ஷியாம் கமிட் ஆகியிருக்கிறார்.

சந்தோஷி கம் பேக்?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் நடிகர் விஜய் சேதுபதியைச் சந்தித்திருக்கின்றனர். இவர்கள் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக, அந்தப் புகைப்படத்தில் நடிகர் சங்க நிர்வாகிகளுடன் தேர்தலில் எந்தவொரு பதவிக்கும் நிற்காத நடிகை சந்தோஷியும் இருந்தார்.

ஆரம்பத்தில் ராடானின் சீரியல்கள் பலவற்றில் நடித்த சந்தோஷியை சமீப சில வருடங்களாக சீரியல்களிலேயே பாரக்க முடியவில்லை. சீரியல்களை காட்டிலும் மேக் அப் வகுப்புகளில் அதிகமாக கவனம் செலுத்துவதாக அந்த ஏரியாவுக்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள்.

சந்தோஷி

அவரும் சென்னை தாண்டி பெங்களூரு, ஐதராபாத் என பல இடங்களில் மேக் அப் செமினார்கள் நடத்தி வநதார். இந்த தேர்தலில் போட்டியிடா விட்டாலும், தேர்தலுக்கு முன் நடிகர் பரத் தலைமையிலான அணிக்கு ஆதரவாக அவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

புதிய நிர்வாகம் பதவி ஏற்றவுடன் ஓரிரு நியமனப் பதவிகள் நிரப்பப்படலாம் என்கிற சூழலில் அந்த இடத்துக்கு தற்போது இவரது பெயரும் அடிபடுகிறது. எனவேதான் இவரை தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளூடன் பார்க்க முடிகிறது என்கிறார்கள்.

திரும்பவும் சீரியல்களில் இவரைப் பார்க்க முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *