
சென்னை: அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவது தான் என் வேலை. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும். அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று சசிகலா கூறியுள்ளார்.
சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: