• August 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஒடி​சா​வின் 4 முக்​கிய மாவட்​டங்​களில் இந்​திய தொல்​லியல் துறை நடத்​திய ஆய்​வில் 10 முதல் 20 டன் அளவுக்கு தங்​கம் இருக்​கலாம் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

ஒடி​சா​வின் பல மாவட்​டங்​களில் மண்​ணில் புதைந்​துள்ள கனிமங்​கள் குறித்து இந்​திய தொல்​லியல் துறை ஆய்வு மேற்​கொண்​டது. இதில் தியோகர், சுந்​தர்​கர், நபரங்​பூர், கியோன்​ஜர், அங்​குல் மற்​றும் கோராபுட் ஆகிய பகு​தி​களில் தங்க கனிமங்​கள் இருப்​பது உறு​திபடுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், மயூர்​பன்ச், மல்​கன்​கிரி, சம்​பல்​பூர் மற்​றும் பவுத் ஆகிய இடங்​களில் ஆய்​வு​கள் நடை​பெற்று வரு​கிறது. இதன் காரண​மாக , ஒடிசா தங்க சுரங்​க​மாக மாறவுள்​ளது. இங்கு 10 முதல் 20 மெட்​ரிக் டன்​கள் அளவுக்கு தங்​கம் இருக்​கலாம் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஒடி​சா​வின் பல பகு​தி​களில் தங்​கம் இருப்​ப​தை, ஒடிசா சுரங்​கத்​துறை அமைச்​சர் கடந்த மார்ச் மாதமே ஒடிசா சட்​டப்​பேர​வை​யில் அறி​வித்​தார். இதனால் இங்கு தங்க சுரங்​கம் தோண்​டு​வதற்​கான ஏலம் விரை​வில் நடை​பெறும் எனத் தெரி​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *