• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார். சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, நாடாளு​மன்ற கூட்​டம் இன்று மீண்​டும் தொடங்குகிறது. இதையொட்​டி, மநீம கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் எம்​.பி., சென்​னை​யில் இருந்து ஏர் இந்​தியா விமானம் மூலம் நேற்று டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார்.

சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்​கைகள் குறித்து நீண்ட நாட்​களாக பேசிக்​கொண்டு இருக்​கிறேன். என் பேச்​சுகளை முழு​மை​யாக கவனிப்​பவர்​களுக்கு அது தெரி​யும். தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினை​களை நாம் உடனடி​யாக பேசி சரிசெய்ய வேண்​டும். இதுகுறித்து முதல்​வரிடம் எடுத்​துச் சொல்ல இருக்​கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *