
புதுடெல்லி: வாக்கு திருட்டு குற்றச்சாட்டை நிராகரித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மக்களை தவறாக வழிநடத்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கிறார் என கூறியுள்ளார்.
பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் ஆணையம், ஆளும் பாஜக.,வுடன் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு சதி செய்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.