
சிறந்த இயக்குநருக்கான இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கிய இயக்குநர் Alejandro González Iñárritu வின் படத்தில் நடிப்பதை நடிப்பு அரக்கன் பஹத் பாசில் தவித்ததாக செய்திகள் வெளியாகின. மெக்சிகோவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பல்வேறு முகங்களை உடையவர் Alejandro González Iñárritu. Amores Perros (2000), 21 Grams (2003), Babel (2006), Biutiful (2010), Birdman (2014) இந்தப் படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. The Revenant (2015) லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது, 2015, 2016 “சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது” பெற்றவர்.
இவர் தனது அடுத்த படத்தை பிளாக் காமெடி ஜானரில் இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் டாம் குரூஸ் முன்னணி கதாபாத்திரத்திலும், ஜெஸ்ஸி பிளெமன்ஸ், சாண்ட்ரா ஹுல்லர், ரிஸ் அகமது, சோஃபி வைல்ட், எம்மா டி’ஆர்சி, ராபர்ட் ஜான் பர்க் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதாகத் தகவல் வெளியானது. இந்தப் படத்தில்தான் நடிகர் பஹத் பாசிலும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தி கியூ ஸ்டுடியோ எனும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பஹத் பாசில் பேட்டியளித்திருக்கிறார்.
அதில், ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பஹத் பாசில், “ உண்மையில் சொல்வதானால் ஆடிஷனுக்குப் பிறகு அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் என்னுடைய ஆங்கில உச்சரிப்பு என்பதை புரிந்துகொண்டேன். அதனால் என்னை 3 – 4 மாதங்கள் அமெரிக்காவில் சம்பளமின்றி தங்கச் சொன்னார்கள். படத்துக்கான அட்வான்ஸ் கூட கொடுக்கவில்லை. அதனால்தான் நான் அந்த புராஜெக்டைவிட்டுவிட முடிவு செய்தேன்.
ஆடிஷன் இல்லையென்றால், நான் அதற்கு பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்பு கூட கிடைத்திருக்காது. இருப்பினும், நான் அவருடன் ஒரு வீடியோ அழைப்பில் பேசினேன்.
அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் தேடும் நபர் நான் இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். மேலும், அந்தப் படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க எனக்குள் இருக்கும் அந்த உந்துதல் எதையும் நான் உணரவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மாரீசன் படத்துக்குப் பிறகு பஹத் பாசில் – கல்யாணி பிரிய தர்ஷினி நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘ஓடும் குதிர சாடும் குதிர (OKCK)’. இந்த மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…