
திருவண்ணாமலை: "திமுக எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னியை திருடி விற்கப்படுவது குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக விசாரிக்கப்படும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் திருவண்ணாமலை அண்ணா சாலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அருணாச்சலேஸ்வர திருக்கோயிலை தொல்லியல்துறை கைப்பற்ற முயன்றபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று மீட்டெடுத்தார்.