• August 17, 2025
  • NewsEditor
  • 0

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.

அதில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொடுத்த அறிக்கை வாசிக்கப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்

ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் குற்றச்சாட்டுகள் என்னென்ன?

1. 2024-ம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட சிறப்பு புத்தாண்டு கூட்டத்தில், அன்புமணி மைக்கைத் தூக்கிப் போட்டு பேசியது, பனையூரில் புதிய கட்சி அலுவலகம் தொடங்கியுள்ளேன்… அங்கே என்னை வந்து பாருங்கள்… என்று கட்சியை பிளவுப்படுத்தியது, குழப்பத்தை ஏற்படுத்தியது,

2. கடந்த மே மாதம் நடந்த மாநாட்டிற்கு பின், தைலாபுரத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்று ராமதாஸ் அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும், உங்களிடம் கையெழுத்து பெற்று என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுவார் என்று வதந்திகளைப் பரப்பி 108 மாவட்ட செயலாளர்களில், 100 மாவட்ட செயலாளர்களைத் தைலாபுரம் வரவிடாமல் தடுத்தது,

3. பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகப் பிரிவினர் சிலரை கையில் வைத்துக்கொண்டு, ராமதாஸ் மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒவ்வொரு நாளும் தவறான செய்திகளைப் பரப்பி அவமானத்தை ஏற்படுத்துவது,

4. தமிழ்நாட்டின் மூத்தவர்கள், இருவருக்கும் மத்தியில் சமாதன பேச்சுவார்த்தையை நடத்தினர். இதை ராமதாஸ் ஏற்றார். ஆனால், அன்புமணி தரப்பு, அந்தப் பேச்சுவார்த்தையை உதாசினப்படுத்தியது,

5. தைலாபுரத்தில் ராமதாஸ் இருக்கைக்கு அருகேயே ஒட்டுக்கேட்பு கருவியைப் பொருத்தியது.

6. ராமதாஸ் அனுமதி இல்லாமல், பொதுக்குழு கூட்டம் கூட்டி, அதில் ஒரு நாற்காலிக்கு துண்டு அணிவித்து, அவரது புகைப்படம் வைத்து, ராமதாஸிற்கு நல்ல புத்தி தரும்படி வேண்டியது,

7. ராமதாஸிடம் தகவல் தெரிவிக்காமல், உரிமை காக்கும் பயணம் மேற்கொள்வது,

8. தைலாபுரம் தோட்டத்திற்கு ராமதாஸை சந்திக்க வருபவர்களிடம் ஆசைவார்த்தைக் கூறி தடுத்து, கடத்திச் செல்வது,

பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்
பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்

9. ‘என்னுடைய பெயர் மற்றும் புகைப்படம் பயன்படுத்தப்படக் கூடாது’ என்று வெளிப்படையாக வலியுறுத்தியும், ‘எங்களது குலசாமி’ என்று தொடர்ந்து பேசிவருவது,

10. மக்கள் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ராமதாஸ் சம்பந்தமான எந்த நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பவில்லை. இதன் மூலம், ராமதாஸிடம் இருந்து அந்தத் தொலைக்காட்சியை திட்டமிட்டு அபகரித்தது

11. ராமதாஸ் தொடங்கிய பசுமை தாயக அமைப்பைக் கைப்பற்றியது.

12. ராமதாஸ் அனுமதி இல்லாமல், அன்புமணி ஒரு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி, ராமதாஸிற்கு நாற்காலி ஒன்று போடப்பட்டது,

13. பாமக தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது,

14. கடந்த மே மாதத்திற்கு பிறகு, ராமதாஸின் அனைத்து நியமனங்களும் செல்லும். அதற்கு முன், ராமதாஸ் நீக்கி, அன்புமணி, ‘அவர்கள் கட்சியில் தொடர்வார்கள்’ என்று அறிவித்தது செல்லாது.

15. ராமதாஸிடம் 40 முறை பேசியதாக வெளியில் பொய் கூறியது.

16. ஜி.கே மணி, ஆர்.அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்போது, கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று கேலி செய்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *