
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் முதல், பாமகவில் அன்புமணி, ராமதாஸ் இடையில் முட்டல், மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது.
அதுவும், ‘யார் தலைவர்?’ என்கிற போட்டி கடுமையாக இருந்து வருகிறது.
நடக்க வேண்டிய தேர்தல்
கடந்த மே 30-ம் தேதியோடு, பாமக தலைவர், பொதுசெயலாளர் உள்ளிட்ட பதவிக்காலம் முடிந்துவிட்டது. இப்போது தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பாமகவின் உட்கட்சித் தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
ராமதாஸே தலைவர்!
இந்த நிலையில், இப்போது நடந்துகொண்டிருக்கும் கூட்டத்தில், நிர்வாகக் குழு, செயற்குழுவின் முடிவின் படி, ராமதாஸே தலைவராக செயல்படுவார் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கடந்த வாரம், அன்புமணி தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, அவரே தலைவராக தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாறி மாறி ராமதாஸ், அன்புமணி கூட்டங்கள் நடத்துவதும், தலைவர் பதவியை ஏற்பதும் பாமகவினர் மத்தியில் குழப்பங்களைத் தான் ஏற்படுத்தும்.