
இந்த ஆண்டின் இறுதியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி, பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதில் பல வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்… உயிரோடு இருக்கும் சிலர் இறந்துவிட்டதாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்… பலர் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தத் திருத்தம் குறித்து தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பியும் வருகிறது எதிர்க்கட்சிகள்.
ராகுல் காந்தியின் பயணம்
இதில் ஒரு பகுதியாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இன்று முதல் பீகாரில் 16 நாள்களுக்கு பயணம் மேற்கொள்ளப்போகிறார்.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர் விஷயங்களில் கொண்டுவர வேண்டிய திருத்தங்கள் குறித்தும், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் குளறுபடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும்.
இந்தப் பயணம் இன்று பீகார் மாநிலத்தில் தேஹ்ரியில் இருந்து தொடங்கப்படுகிறது. இந்தப் பயணத்திற்கு ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கைக்கொடுக்குமா?
2022-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னும், ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்று ஒரு யாத்திரையை மேற்கொண்டிருந்தார்.
அது அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் பெரியளவில் கைக்கொடுத்திருந்தது.
அதே மாதிரி, இந்த யாத்திரையைக் கைக்கொடுக்குமா… சிறப்புத் தீவிர திருத்தம் கைவிடப்படுமா என்பது செப்டம்பர் 1-ம் தேதிக்கு (யாத்திரையின் கடைசி நாள்) பிறகு தெரிய வரும்.