
மேடாக் பிலிம்ஸ் (Maddock Films) தினேஷ் விஜன் தயாரித்தப் படம் பரம் சுந்தரி. ஶ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும், தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூரும் காதலிக்கின்றனர். இவர்களது காதலில் ஏற்படும் பிரச்னைகளை இந்தக் காதல் ஜோடி எப்படி சமாளிக்கிறது என்பதாக கதை இருக்கும் என டிரைலர் மூலம் தெரியவருகிறது.
இந்த நிலையில், பரம் சுந்தரி படத்தில் ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்பு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து மலையாள நடிகை பவித்ரா மேனன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “நான் பவித்ரா மேனன்; நான் ஒரு மலையாளி, நான் பரம் சுந்தரியின் டிரெய்லரைப் பார்த்தேன். `அதில் ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்புக்கான சில வினாடி காட்சிகளைப் பகிர்ந்து’ சரியான மலையாள நடிகரை பணியமர்த்துவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? (இந்தியில் தன் பேச்சை தொடர்ந்த பவித்ரா மேனன்) மலையாள திரையுலகில் இருக்கும் நடிகைகள் திறமை குறைந்தவர்களா? கேரளாவில் இது நடக்காது…
நான் இந்தியில் பேசுவது போல, மலையாளத்தையும் நன்றாகப் பேச முடியும். இந்திப் படத்தில் ஒரு மலையாளிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு மலையாளியைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமா? 90-களில் பஞ்சாபிகளை சித்தரிக்க பல்லே பல்லே நடனமாடினார்கள். ஆனால் இது 2025. ஒரு மலையாளி எப்படிப் பேசுவார், மற்றவர்களைப் போல சாதாரணமானவர்தான் என்பது அனைவருக்கும் தெரியும். மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு எல்லா இடத்திலும் மோகினியாட்டத்தை மட்டும் நாம் ஆடுவதில்லை. எனக்கு ஜான்வி மீது எந்த கோபமும் கிடையாது. ஆனால் ஏன் இப்படி?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…