
தலைமைச் செயலகத்தை வரும் 22-ம் தேதி முற்றுகையிட போவதாக டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், டிட்டோஜேக் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொடக்கக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 14-ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாகக் காரணங்களால் கூட்டமானது ஆக.18ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.