
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சிறுமியின் இறப்புக்கான காரணம் குறித்து நுண் உயிரியியல் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின் மூளையில் அரியவகை அமீபா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மூளை திசுக்களை திண்ணும் இந்த அரிய வகை அமீபா மாசடைந்த ஏரி, குளம், ஆறுகளில் இந்த வகை அமீபா உயிர் வாழும். இந்த நீர்நிலைகளில் குளித்தால், மூளைவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.