
சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்புதான், நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும் என்று திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 63-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி. சென்னை, காமராஜர் அரங்கில் நேற்று மதச் சார்பின்மை காப்போம்' என்னும் கருப்பொருளை மையப்படுத்தி சிறப்பு நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் விழா தொடங்கியது. விழா மேடைக்கு வந்த திருமாவளவனுக்கு சிறுமி பூ கொடுத்து வரவேற்றார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, ஏஐ தொழில்நுட்பத் தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.