
புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘குடியரசு துணைத் தலைவர் தேர்வு ஒருமனதாக நடைபெற்றால் வழக்கம் போல நியமனம் நடைபெறும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.