
திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திமுகவின் துணை பொதுச்செயலாளர், மூத்த தலைவருமான ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இருக்கும் இவரது வீடு, இவரது மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில்குமாரின் சீலப்பாடி வீடு, சிங்காரக்கோட்டை நூற்பாலை, சென்னை வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து பேசியிருக்கும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இதுவரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் என்ன நடந்தது என்று யாருக்காவது தெரியுமா? அதனால் என்ன பயன்?
அமலாக்கத்துறை எங்கெல்லாம் சோதனை நடத்துகிறதோ அங்கெல்லாம் பணம் வாங்கவில்லை என்று மறுக்கமுடியுமா? போன இடமெல்லாம் காசு வாங்கியிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் வேண்டுமானால் நானே தருகிறேன். வருமான வரித்துறையில் இருந்துவரும் வருமானம் போதுமானதாக இல்லை. அதனால் அமலாக்கத்துறையை வைத்து நாடகம் நடத்துகிறார்கள். இந்த அமலாக்கத்துறை ரெய்டெல்லாம் வெறும் ஏமாற்று வேலைதான்” என்று விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs