• August 16, 2025
  • NewsEditor
  • 0

மும்பையில் பால் ஆர்டர் செய்ய  முயன்ற மூதாட்டி ஒருவர் 18.5 லட்ச ரூபாயை இழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை வாடாலா பகுதியைச் சேர்ந்த 71 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைன் டெலிவரி ஆப் ஒன்றில் பால் வேண்டும் என்று ஆர்டர் செய்திருக்கிறார்.

அப்போது அந்த பால் நிறுவனத்தில் பணிபுரியும்  தீபக் என்ற நபர்  மூதாட்டிக்கு போன் செய்திருக்கிறார்.

scam

பால் ஆர்டர் செய்ய உரிய விவரங்களை தரவேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதற்கான லிங்க் ஒன்றையும் மொபைல் போனிற்கு  தீபக் என்ற நபர் அனுப்பி இருக்கிறார்.

பின்னர் செல்போன் அழைப்பை துண்டிக்காமல், அந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.

மூதாட்டியும் அவரது பேச்சை நம்பி, அதில் கேட்கப்பட்ட விவரங்களை கொடுத்திருக்கிறார்.

அப்போதும் விடாமல், மீண்டும், மீண்டும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை மூதாட்டியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், மூதாட்டி வைத்துள்ள 3 வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் 18.5 லட்ச ரூபாயை  மோசடி செய்திருப்பது  தெரிய வந்திருக்கிறது.

scam
scam

இதைக் கண்டு அதிர்ந்த பாதிக்கப்பட்ட மூதாட்டி, உடனடியாக காவல்துறையின் உதவியை நாடி இருக்கிறார்.

வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மூதாட்டியின் செல்போனுக்கு வந்த அழைப்பு எங்கிருந்து வந்தது, லிங்க் அனுப்பியவர் யார் என்று விசாரணையைத்  தொடங்கி இருக்கின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *