
சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்தோடு நீண்டகாலம் மக்கள் சேவையாற்றி, வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்.