
நடிகை மிருணாள் தாக்குர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர், நடிகர் தனுஷை காதலிப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், மிருணாள் தாக்குர். சில வருடங்களுக்கு முன் நடிகை பிபாஷா பாசு பற்றி அவர் பேசிய வீடியோ, இப்போது வைரலானது. அதில், "நான் பிபாஷா பாசுவை விட நன்றாக இருக்கிறேன். ஆண்களைப் போல தசைகளைக் கொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? பிபாஷா பாசு இருக்கிறார்" என்று அவரை உருவக் கேலி செய்யும் விதமாகப் பேசியிருந்தார். இது சர்ச்சையானது.
இதற்குப் பதிலளித்த பிபாஷா பாசு, "வலிமையான பெண்கள் எல்லோரையும் உயர்த்தி விடுவார்கள். அழகான பெண்களே, உங்கள் தசைகளை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். அதுவும் பெண்மைக்கு அழகுதான். பெண்கள் உடல் ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள்தனமான சிந்தனையை மாற்றுங்கள்" என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.