
புதுடெல்லி/ சென்னை: நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எம்.ஐ-16 ரக ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. அனைத்து ஹெலிகாப்டர்களிலும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடி பறந்தது.