
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளையும் வழங்கினார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், இந்த ஆண்டுக்கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில், ‘தகைசால் தமிழர்’ விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கினார். ரூ.10 லட்சம் விருதுத் தொகை, சான்றிதழும் வழங்கப்பட்டது.