• August 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கட்​ட​ணமில்லா விடியல் பேருந்து பயணத்​திட்​டம், மலைப் பகு​தி​களில் உள்ள மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் விரிவுபடுத்​தப்​படும் என்​பது உட்பட 9 அறி​விப்​பு​களை சுதந்​திர தின உரை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டார்.

நாட்​டின் 79-வது சுதந்​திர தினத்​தையொட்​டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் தேசி​யக் கொடியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஏற்​றி​வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: நாட்​டுக்​காக உழைத்த தியாகி​களைப் போற்​றும் அரசே திமுக அரசு. சுதந்​திரப் போராட்ட வீரர்​களின் நினை​விடங்​களில் ஒலி-ஒளி காட்​சிகள் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. காந்தி மண்​டபம், அருங்​காட்​சி​யகம், பெருந்​தலை​வர் காம​ராஜர் மண்​டபம், பெரிய​வர் பக்​தவத்​சலம் மண்​டபம் ஆகிய​வற்றை மேம்​படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. முன்​னாள் படைவீரர்​கள் மற்​றும் அவர்​களைச் சார்ந்​தோர்​களுக்​காக ‘காக்​கும் கரங்​கள்’ திட்​டத்தை வரும் 19-ம் தேதி தொடங்கி வைக்க உள்​ளேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *