
சென்னை: கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது, துணைவேந்தர் நியமன விவகாரம் ஆகியவற்றில் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் அவர் இன்று மாலை அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கருத்து தெரிவித்து, செயல்பட்டு வருகிறார்.