
சென்னை: மாநில கல்விக் கொள்கையின் படி முறையான கால அட்டவணை அமைத்து, பாடத்திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினார்.
பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை வகித்தார். துறை செயலர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் மற்றும் துறை சார்ந்த இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டனர்.