
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், உத்தரப்பிரதேத்தில் இருக்கும் விருந்தாவனில் ஆன்மீக மதகுரு பிரேமானந்த் மகாராஜைச் சந்தித்துத் தரிசித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது ஆன்மீக மதகுருவிடம் இருவரும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தனக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதாகிவிட்டதாகவும், அதோடுதான் 10 ஆண்டுகளாக வாழ்வதாக இருவரிடமும் பிரேமானந்த் மகாராஜ் தெரிவித்தார்.
அதற்கு ராஜ் குந்த்ரா, ‘நான் உங்களைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பின்பற்றுகிறேன். உங்களது வீடியோ எனது அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுப்பதாக இருப்பதால் உங்களிடம் கேள்வி கேட்க எனக்கு எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.
அதோடு, ‘உங்களது உடல்நிலை எனக்குத் தெரியும். என்னால் உதவ முடியும் என்றால் எனது ஒரு சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று ராஜ் குந்த்ரா தெரிவித்தார்.
ராஜ் குந்த்ராவின் இந்தப் பேச்சைக் கேட்டு ஷில்பா ஷெட்டி ஆச்சரியம் அடைந்தார். ராஜ் குந்த்ராவின் பேச்சைக் கேட்ட பிரேமானந்த் மகாராஜ், ‘எனக்கு இதுவே போதும். நீ ஆரோக்கியத்துடன் இரு. இறைவனிடமிருந்து அழைப்பு வராமல் நான் இந்தச் சிறுநீரக பிரச்னையால் இந்த உலகத்தை விட்டுச் செல்லமாட்டேன். ஆனால் உங்களது வேண்டுகோளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது ரூ.60 கோடி மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் பிரேமானந்த் மகாராஜாவை வந்து தரிசனம் செய்துள்ளனர். ஏற்கனவே ராஜ் குந்த்ரா மீது ஆபாச வீடியோ தயாரித்து ஒ.டி.டி தளத்தில் வெளியிட்டதாகக் கைது செய்யப்பட்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…