
சென்னை: விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
79-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை இன்று ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். பின்னர் பல்வேறு விருதுகளை வழங்கினார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். அதில் இடம்பெற்ற 9 முக்கிய அறிவிப்புகள்: