• August 15, 2025
  • NewsEditor
  • 0

அடிக்கிற வெயிலுக்கு உடம்பு சூட்டை தணிக்க திருநெல்வேலி மக்கள் எப்போதும் எதிர்பார்க்கிறது குற்றாலம் சீசன் தான்.

ஆனா எல்லா சீசன்லயும் தண்ணி, சும்மா அடிச்சிட்டு வரணும்னா அதுக்கான ஒரே ஸ்பாட் நம்ம திருநெல்வேலி களக்காடில் இருக்கக்கூடிய தலையணை ஃபால்ஸ் தான். களக்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் உள்ளே தள்ளி இருக்கக்கூடிய இந்த ஃபால்ஸ்க்கு பல மாவட்டங்களில் இருந்தும் வீக் எண்டுல குடும்பத்தோடு வந்து ஜாலியா ஆட்டம் போடுவாங்க. பேரளவில் மட்டும் களக்காடு இல்ல….நிஜமாகவே காட்டுக்குள் சென்றது போல ஒரு அட்வென்சரஸ் ஃபீல் கிடைக்கும்.

எப்போதுமே நல்லா தண்ணீர் வருகின்ற இந்த அருவியில், மழைக்காலங்களில் இன்னும் அதிகமாகவே தண்ணீர் வரும். பெருக்கெடுத்து ஓடுற தண்ணியில தலைய வச்சா உடம்புல இருக்குற எல்லா சூடும் கண்ணு வழியே உடனே வெளியேறத அப்படியே ஃபீல் பண்ணலாம்… தண்ணி அவ்வளவு ஜில் ஜில்லுன்னு இருக்கும். ஆனா ஈவினிங் 5 மணியோட க்ளோஸ்..

குறைந்த கட்டணம்தான். உள்ளேயே ஹோட்டலும் இருக்கு. அங்கேயே சாப்பிட்டுக்கலாம். இல்ல நீங்க புளிச்சோறு கட்டிக் கொண்டு வர பரம்பரையா இருந்தாலும் நோ ப்ராப்ளம். அங்கேயே சாப்பிடவும் தனியா இடம் இருக்கு. சரமாரியா குளிச்சி ஆட்டம் போட்டதுல தானாவே பசி எடுக்கும். உடனே அங்கேயே சாப்பிட்டுக்கலாம். பிளாஸ்டிக் பாலித்தீன் போன்ற விஷயங்கள் எதுவுமே நாட் அலவுடு…

ஆனா 100% ஃபன் கேரண்டீட்.!

களக்காடுக்கு அப்புறம் சம்மருக்கு ஏத்த நெக்ஸ்ட் ஸ்பாட்னா நம்ம திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சிக்கும் சிங்கம்பட்டிக்கும் அருகில் இருக்கக்கூடிய மாஞ்சோலை ரோட்டில் இருக்கும் மணிமுத்தாறு டேம் மற்றும் மணிமுத்தாறு ஃபால்ஸ் தான். கார், பைக் லாம் வச்சிருக்கீங்கன்னா நேரா வண்டிய ஃபால்ஸ்கு விட்ருங்க. பஸ்ல வரீங்கன்னா திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் பஸ் ஏறி, அங்கு இருந்து மணிமுத்தாறுக்கு வாங்க. அங்க முதல்ல விசிட் பண்ண வேண்டியது மணிமுத்தாறு டேம்.

மழைக்காலங்களில் வங்காள விரிகுடாவில் மழைநீர் கலக்காமல் இருப்பதற்காக 1958 ல நம்ம தமிழக முதல்வராக இருந்த காமராஜர் கட்டுன இந்த மணிமுத்தாறு டேம், சுமார் 5500 கன அடியை கொண்டது. டேம்ம விசிட் பண்ணிட்டு ஸ்ட்ரைட்டா மணிமுத்தாறு ஃபால்ஸில் போய் ஒரு குளியல போட்டுருங்க. அங்க மாலை 3.30 மணி ஓட க்ளோஸ். எல்லா சீசன்லயும் தண்ணி வரும். குறைந்த கட்டணத்தில் சம்மர் வெக்கேஷன் பிளான் பண்றீங்கனா இந்த ஸ்பாட்டை விஷ் லிஸ்ட்ல வைங்க.

என்னது…. புதிய தலைமுறை, சக்தி, சுந்தர்.சி திரைப்படங்கள் மற்றும் தமிழ் சீரியல்கள் இங்க தான் பெரும்பாலும் எடுப்பாங்களா…? ஆமா.

திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சிக்கு அருகே இருக்கக்கூடிய ஜமீன்சிங்கம்பட்டியில் லொகேட்டாகியிருக்க இந்த ஷூட்டிங் ஸ்பாட் தான் சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை. ஜமீன் ஒழிப்பு முறைக்கு பிறகு நாட்டின் கடைசி மன்னராக இருந்த ஜமீன் முருகதாஸ் அவர்களுடைய அரண்மனை தான் இது. ஆண்டுகள் சென்றாலும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் இன்றளவிலும் அப்படியே பாதுகாத்து வருகின்றனர்.

விருந்து பரிமாறும் அறை, மர ஊஞ்சல், அவர்கள் பயன்படுத்திய நூலக அறை, அந்த காலத்தில் மன்னர்கள் இறந்தால் தூக்கி செல்வதற்கு பயன்படுத்திய பாடை, பழங்காலத்து புகைப்படங்கள், அந்த காலத்தில் ஜமீன் தலைமையிலேயே திருமணங்கள் நடைபெற்றதால் அரண்மனைக்குள்ளேயே மணமேடை, வில்வண்டி, மன்னர்கள் குளிப்பதற்காகவும் ஒப்பனை செய்வதற்காகவும் இருக்கக்கூடிய அந்தப்புரம் போன்ற பல சுவாரசியமான விஷயங்கள் அங்கே இருக்கின்றது. பார்ப்பதற்கு அப்படியே டைம் மெஷின் கொண்டு அந்தக் காலத்திற்கே சென்றது போல ஒரு ஃபீல் கிடைக்கும்.நீங்க ஒரு பாரம்பரியம் மற்றும் வரலாறு விரும்பியா இருந்தா நீங்க திருநெல்வேலியில விசிட் பண்ண வேண்டிய இடம் கண்டிப்பா சிங்கம்பட்டி ஜமீன் பேலஸ் தான்.

“ கருப்புத்தான் அழகு…. காரம் தான் ருசி” ன்னு சொல்லிட்டு திரியிற ஆளா நீங்க..? ஸ்ட்ரெயிட்டா கிளம்பி திருநெல்வேலி மேலப்பாளையம்ல இருக்க A1 கறிக் கடைக்கு வந்துருங்க. பெயருக்கு ஏற்ற மாதிரியே இங்க கிடைக்கிற எல்லா டிஷ்மே ஃபர்ஸ்ட் கிளாஸ் தான். மேலப்பாளையம் சந்தை மெயின் ரோட்டில் லொக்கேட்டாயிருக்க இந்த கறிக்கஞ்சி மற்றும் சூப் கார்னர், 15 வருஷத்துக்கும் மேல இயங்கிட்டு இருக்கு.

கறி வடை, பீஃப் கட்லெட், சிக்கன் லிவர் ஃப்ரை, சிக்கன் 65, குடல் ஃப்ரை, குடல் கிரேவி, மட்டன் சூப் எல்லாத்துக்கும் மேல இவங்க கிட்ட கிடைக்கிற டாப் நாட்ச் ஐட்டம்னா அது கறிக்கஞ்சி தான். வீட்டில அரைக்கிற மசாலாவையே பயன்படுத்தி சீப்பான பிரைஸ்ல அல்டிமேட் டேஸ்ட்டோட சுட சுட கறிக்கஞ்சில கறிவடைய பிச்சு நொறுக்கி கொடுக்கும்போது… உண்மையாவே ஹெவன்லி ஃபீல்…. அதுவும் ரம்ஜான், பக்ரீத் டைம்ல வந்தீங்கன்னா கடை

கலை கட்டும்.. என்னதான் சிட்டில பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்ணாலும் நான் ஒரு கையேந்திபவன் கேட்டகரிதான்னு சொல்றவங்களா நீங்க இருந்தா கண்டிப்பா A1 கறி கடைக்கு ஒரு அட்டனன்ஸ் போட்டுருங்க….

நம்ம திருநெல்வேலில இப்படி ஒரு யூனிக்கான பெட் ஷாப் ஆ?அமா.. சமாதானபுரம் ரோடு ,திருச்செந்தூர் பஸ் ஸ்டாப்புக்கு பின்னாடி இருக்கக்கூடிய பெட் ஷாப் தான் WOW PUPS (The World Of Wiggly).நீங்க ஒரு டாக் லவ்வர் இல்ல கேட் லவ்வரா இருந்தீங்கனா கண்டிப்பா நீங்க விசிட் பண்ண கூடிய இடம் வாவ் பப்ஸ் தான். நாய், பூனை இரண்டுக்குமே சரி குரூமிங், ஸ்பா, வெளியே செல்லும் பொழுது பெட்டை விட்டு செல்வதற்கான பெட் ஹாஸ்டல், பேசிக் ட்ரைனிங், அட்வான்ஸ் ட்ரெய்னிங் போன்ற சர்வீஸ் மட்டுமல்லாமல் ஒரு பெட்டுக்கு தேவையான ஏ டூ இசட் எல்லாமே உள்ளது.

குறிப்பாக ஒரு பெட் லவ்வரை குஷிப்படுத்தும் க்யூட்டான விஷயங்கள் அனைத்துமே இங்கு உள்ளது. ஒரு பெட்டுக்கான பிரஷ், பேஸ்ட், சீப்பு, ஷாம்பூ, நைல் கட்டர், டிரஸ், கேப், ஷூஸ், பூட்ஸ், paw கிளீனிங் டிவைஸ், பூப் ஸ்கூப்பர், டிராவல் ஃபீடிங் பவுல், பீட்சா, கேக், Non Veg சாக்லேட் , ஐஸ்கிரீம், ஸ்னாக்ஸ், டாய்ஸ், கூலிங் பவுல், ஸ்லீப்பிங் பெட் மற்றும் காட், காலர் செயின் ,பாடி பெல்ட், ட்ரைனிங் லீஷ் போன்ற பல யுனிக்கான ஐட்டங்கள் ப்ரீமியமான குவாலிட்டியில் இங்கே கிடைக்கிறது .

இன்னும் கொஞ்ச நாட்களில் பெட்டுக்கான ஸ்விம்மிங் ஃபூல் கூட வரப்போகிறது. இங்கே கேரளா, பெங்களூர், நார்த் இந்தியா போன்ற பல இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 விதமான நாய்களும், பெர்சியன் கேட் உள்பட 6 விதமான பூனைகளும் இருக்கின்றன. பெட் சர்வீஸ் நடக்கும் போது கஸ்டமர்ஸ் வெயிட் பண்ணக்கூடிய வெயிட்டிங் ஹால்ல உக்காந்து சுத்தி அந்த ஆம்பியன்ஸ பாத்தா….”நம்ம கூட இப்படி வாழலையேடா…!” ன்னு தோணும்… எப்படி இருந்தாலும் திருநெல்வேலியில முதன்முறையா ப்ரொஃபெஷனலிஸத்தோட ரன் ஆகுற யூனிக்கான ஆம்படியன்ஸ் இருக்கிற பெட் ஷாப்னா வாவ் பப்ஸ் தான்.

கண்டிப்பா நெல்லையில இன்னும் பல ஸ்பாட்கள் இருக்கு. அதுல உங்க பேவரரேட் எதாவது இருந்தா அத கமெண்ட்ல சொல்லுங்க மக்களே.!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *