
புதுடெல்லி: “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “என் அன்பான இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர தின விழா பெருமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணம் ஆகும். இது 140 கோடி மக்களின் கொண்டாட்டம்.