
சென்னை: மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டதால் நானும் ஓய்வெடுக்க போவதில்லை.; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளை களையவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் ‘உங்களுடன் ஸ்டாலின்', ‘நலம் காக்கும் ஸ்டாலின், ‘தாயுமானவர் திட்டம்' ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் மக்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.