• August 15, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: நெல்லை மனோன்​மணி​யம் சுந்​தரனார் பல்​கலை.​யில் நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி 739 மாணவர்​களுக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். மனோன்​மணி​யம் சுந்​தர​னார் பல்​கலை.​யின் 32-வது பட்​டமளிப்பு விழா வ.உ.சி. கலை​யரங்​கில் நடை​பெற்​றது. பல்​கலைக்​கழகம் மற்​றும் அதன் 104 உறுப்​புக் கல்​லூரி​களில் படித்த 37,376 பேருக்கு பட்​டங்​கள் வழங்​கப்பட்​டன.

இவர்​களில் 739 பேருக்கு ஆளுநர் ஆர்​.என். ரவி நேரடி​யாக பட்​டங்​களை வழங்​கி​னார். துணைவேந்​தர் ந.சந்​திரசேகர் வரவேற்​றார். இந்​திய புவி காந்​த​வியல் நிறுவன இயக்​குநர் அ.பி.டிம்ரி பட்​டமளிப்பு விழா உரை​யாற்​றி​னார். விழா​வில் பங்​கேற்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்த தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன், விழா​வில் பங்​கேற்​க​வில்​லை. பல்​கலை.​யில் நடை​பெற்ற கடந்த 3 பட்​டமளிப்பு விழாக்​களி​லும் இணைவேந்​த​ரான உயர்​கல்​வித் துறை அமைச்​சர்​கள் பங்​கேற்​க​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *