
சென்னை ரிப்பன் மாளிகையில் 13 நாள்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்திருக்கின்றனர்.
போராடிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களை கண்ணீரும் கம்பளையுமாக வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
ரிப்பன் மாளிகையின் முன் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் கூலி திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நள்ளிரவில் ரிப்பன் மாளிகை முன்பு என்னதான் நடந்தது? காவல்துறை கைது நடவடிக்கையை எப்படி திட்டமிட்டது?