
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா அங்கேனி, உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த கூலி திரைப்படம் இன்று வெளியாகிறது.
ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் இந்தப் படத்துக்கு இயக்குநர் நெல்சன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அவரின் எக்ஸ் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார் எனும் என்றென்றும் இருக்கும் பிரமாண்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள். ரஜினிகாந்த் சார், சினிமாவில் 50 மாயாஜால ஆண்டுகளை நிறைவு செய்ததற்கும் நன்றிகள். திரையில் கூலியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒரு அற்புதமான வெற்றிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் என் அன்பான லோகேஷ், அனிருத் நண்பர்களே!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…