
ஜபல்பூர்: மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் உள்ள ஒரு வங்கியில் பட்டப்பகலில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் ரூ.14.8 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.5.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள கிடோலா பகுதியில் இசாஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி கிளை இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் 6 கொள்ளையர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் இந்த வங்கிக்கு வந்தனர். இவர்களில் 4 பேர் முகத்தை மறைப்பதற்காக ஹெல்மெட் அணிந்து கொண்டு வங்கிக்குள் நுழைந்துள்ளனர். பிறகு துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி ரூ.14.8 கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.5.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சில நிமிடங்களில் தப்பிச் சென்று விட்டனர்.